உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டிசம்பரில் ரிவர்ஸ் கியரில் பயணித்த வாகன விற்பனை

டிசம்பரில் ரிவர்ஸ் கியரில் பயணித்த வாகன விற்பனை

புதுடில்லி:டிசம்பர் மாத வாகன விற்பனை அறிக்கையை வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'நடா' வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் டிசம்பர் வரை, வாகன விற்பனை 8.51 சதவீதமாக அதிகரித்து இருந்தாலும், டிசம்பர் மாதத்தில் 12.49 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.அதாவது, 2023 டிசம்பரில், 20.07 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், கடந்த டிசம்பரில், 17.56 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின.இதுகுறித்து, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர்பேசியதாவது:வெப்ப அலை, மத்திய மற்றும் மாநில தேர்தல்கள், சீரற்ற பருவமழை ஆகியவை தடங்கலாக இருந்தும், நடப்பாண்டு வாகன விற்பனையில் எந்த பாதிப்பையும் இதுவரை ஏற்படுத்தவில்லை.குறிப்பாக, வர்த்தக வாகன விற்பனை 0.70 சதவீதம் மட்டுமே உயர்ந்து, எந்த ஒரு முன்னேற்றமும் இன்றி காணப்பட்டது.பண்டிகை மாதம் கடந்தும் அதிக வாகன இருப்பு, குறைந்த பணப்புழக்கம் மற்றும் அறிமுகங்கள், முகவர்கள் இடையே வர்த்தகப் போட்டி, மோசமான சந்தை நிலவரம், தாமதமான பயிர்க் காப்பீடு மற்றும் அரசு நிதி வெளியீடு உள்ளிட்டவற்றின் காரணமாக, டிசம்பர் மாத வாகன விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை