உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வாகனங்கள் விற்பனை அக்டோபரில் 32 சதவீதம் அதிகரிப்பு

வாகனங்கள் விற்பனை அக்டோபரில் 32 சதவீதம் அதிகரிப்பு

மும்பை:நாட்டில் அனைத்து விதமான வாகனங்களின் சில்லரை விற்பனை, கடந்த மாதம் 32 சதவீதம் அதிகரித்து, 28.33 லட்சமாக இருந்தது என, வாகன முகவர்கள் சங்கமான 'படா' தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 64 சதவீதம் அதிகம். ராபி பருவ விதைப்புகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதால், கிராமப்புறங்களில் வாகன விற்பனை அதிகரித்ததாகவும்; அதிலும் குறிப்பாக, இருசக்கர மற்றும் பயணியர் வாகன விற்பனை அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட தள்ளுபடி, புதிய மாடல்கள் அறிமுகம், அதிக இருப்பு ஆகியவையும் விற்பனை அதிகரிக்க வழிவகுத்துள்ளன.

பிரிவு அக்டோபர் 2023 அக்டோபர் 2024 வளர்ச்சி (%)

இரு சக்கர வாகனம் 15.15 20.65 36.34மூன்று சக்கர வாகனம் 1.10 1.23 11.45பயணியர் வாகனம் 3.65 4.83 32.38டிராக்டர் 0.62 0.64 3.08வர்த்தக வாகனம் 0.92 0.98 6.37மொத்தம் 21.44 28.33 32.14


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை