ரூ.12 கோடி நிதி திரட்டியது வீலோசிட்டி
சென்னை:சென்னையைச் சேர்ந்த, 'வீலோசிட்டி' எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து காய்கறி, பழங்களை வாங்கி, ஆன்லைன் மற்றும் நேரடியாக ஆர்டர் பெற்று வீடுகளுக்கு 'டெலிவரி' செய்கிறது.இந்நிறுவனம், 'லைட்ஸ்பீட் இந்தியா, அல்டெரியாகேப், அனிகட்எப்' நிறுவனங்களிடம் இருந்து, 12 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. தற்போது வீலோசிட்டி, 3,500 நகரங்கள் மற்றும் கிராமங்களில், 10 லட்சம் வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளது. அடுத்த ஆண்டு, 20,000 நகரங்களாகவும், ஒரு கோடி வாடிக்கையாளராகவும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.