கோவாவில் வேலை நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு
பனாஜி:கோவாவில் வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா, அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, தொழில் துறை தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சட்டரீதியாக பாதுகாப்பு அளிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும், ஒரு காலாண்டில், தொழிலாளர்கள் கூடுதலாகப் பணிபுரிய அனுமதிக்கப்படும் நேரம், 125 மணி நேரத்தில் இருந்து, 144 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் இந்த சட்டம் அமலுக்கு வரும்.