உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இளம் தலைமுறையின் பங்கு முதலீடு ஆர்வம்

இளம் தலைமுறையின் பங்கு முதலீடு ஆர்வம்

முதலீடு தொடர்பான அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு வருவதன் அடையாளமாக, இளம் தலைமுறையினர், பாதுகாப்பான முதலீடு வாய்ப்புகளுக்கு மாறாக, பங்கு முதலீட்டை அதிகம் நாடுவதாக தெரிய வந்துள்ளது.நிதிச்சேவை நிறுவனமான பின் ஒன், இந்தியாவின் 13 முக்கிய நகரங்களில் இளம் தலைமுறையினர் மத்தியில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 72 சதவீதம் பேர், வைப்பு நிதி, தங்கம் போன்ற பாரம்பரிய முதலீடுகளை விட பங்கு முதலீட்டிற்கு முன்னுரிமை தருவதாக கூறியுள்ளனர்.மேலும், 39 சதவீதம் பேர் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை நாடுவதாக கூறியுள்ள நிலையில், 58 சசவீதம் பேர் பங்கு முதலீட்டை நாடுவதாக தெரிவித்துள்ளனர். இளம் தலைமுறையினர் இடர் மிக்க முதலீட்டில் தயக்கம் காட்டாததை ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இளம் தலைமுறையினர், நிதி ஆலோசனைகள் மற்றும் தகவல்களுக்கு யு டியூப் சானல்களை அதிகம் நாடுவதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தினர், நண்பர்களை விட யு டியூப் சேனல்களை பலரும் நிதி தகவல்களுக்காக நாடுவதாக தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை