உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஜி.எஸ்.டி., சந்தேகங்கள் / ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (20)

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (20)

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வணிகர் சங்க பிரதிகளுக்கு வாய்ப்பு தேவை

ஜி.எஸ்.டி., நடைமுறைப்படுத்தப் பட்டு, 7 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளன. அதன் பயன், குறைகளை விவாதித்து தீர்வு காணும் 'தினமலர்' முயற்சி வரவேற்கத்தக்கது.ஜி.எஸ்.டி.,யில் பல விகிதாச் சார வரிவிதிப்பு உள்ளதால் வணி கர்களுக்கு மற்றும் நுகர்வோருக்கு நிறைய சிரமங்கள் ஏற்படுகின் றன. அரிசி, பருப்பு, கோதுமை, மாவு போன்ற உணவு பொருட்க ளுக்கு, 25 கிலோ பொட்டலத்திற்கு வரிவிலக்கும்; அதற்கு குறைவான பொட்டலத்திற்கு, 5 சதவீத வரி விதிப்பும் சரியல்ல.சமையல் எண்ணெய்க்கு 5 சத வீத வரியும், நெய்க்கு 12 சதவீதம் வரியும், பூஜைக்கு பயன்படுத்தும் எண்ணெய்க்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படுவதால் வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் பலவித சிரமங்கள் உள்ளன.அனைத்தும் கணினி வாயிலா கவே பயன்படுத்த நடைமுறை உள்ளதால் ஆங்கிலம் மற்றும் போதிய கணினி அறிவு இல்லா வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறைகளை களைய வணிகர்கள் அதிகாரிகளை அணுகும்போது, அவர்கள் அதை விரைவில் நிவர்த்தி செய்வதில்லை.'இன்வாய்ஸ்' போடும்போது ஏற் படும் சிறு தவறுகளுக்கு கூட வழியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, இரண்டு மடங்கு வரி 'தண்டமாக' வசூலிக் கும் வேதனை, வணிகர்களின் பலவித எதிர்ப்பிற்கு பின்பும் தொடர்கிறது. இதனால் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு மிகுந்த சிரமமும், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.வணிகர்களுக்கு வழங்கப்படும் நோட்டீஸ் அவர்களின் இ- மெயி லுக்கு மட்டுமே அனுப்பப்படுவ தால் பல சிறு மற்றும் நடுத்தர வணி கர்கள் அதை அறிந்து கொள்ளாமலே 'தண்டம்' விதிக்கப்பட்டு அவதிக்கு ஆளாகின்றனர்.நடைமுறை சிக்கல்களை களைய அரசு தொடர்ந்து நாடு முழுவதிலும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர் பிரநிதி களுடன் ஆலோசனை நடத்த வேண் டும். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத் தில் வணிகர்களின் தேசிய மற்றும் மாநில பிரநிதிகள் கலந்து கொண்டு குறைகளை எடுத்து கூற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.-எம்.சந்திரதாசன், தலைவர், சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள் சங்கம்.ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.

முகவரி:

ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,சுந்தராபுரம்,கோவை - 641 024.Email: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி