தங்க பத்திரங்களில் 348% லாபம்
ரிசர்வ் வங்கி கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கான முதிர்வு விலையை அறிவித்துள்ளது. இப்பத்திரங்கள் ஆன்லைனில் ஒரு கிராம் 3,133 கிராம் என்ற விலைக்கு வெளியிடப்பட்டன. தற்போது ஒரு கிராமுக்கு 14,024 ரூபாய் முதிர்வு விலை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக, ஒரு கிராமுக்கு 10,891 ரூபாய், அதாவது கிட்டத்தட்ட 348 சதவீத லாபம் கிடைக்கிறது.