உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.பி.ஓ., வரும் 4 நிறுவனங்கள்

 ஐ.பி.ஓ., வரும் 4 நிறுவனங்கள்

'ஏ .ஜி.எஸ்., ஹெல்த், பி.ஜி.பி., கிளாஸ், ஸ்ரேனி ஷேர்ஸ் மற்றும் எஸ்.ஆர்.ஐ.டி., இந்தியா' ஆகிய 4 நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வாயிலாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட செபி அனுமதி வழங்கியுள்ளது. இதில், ஏ.ஜி.எஸ்., ஹெல்த் நிறுவனம் 4,500 கோடி ரூபாயும், பி.ஜி.பி., கிளாஸ் நிறுவனம் 4,100 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுள்ளன. அதேபோல, ஸ்ரேனி ஷேர்ஸ் நிறுவனம் 69 லட்சம் புதிய பங்குகளையும், தற்போதைய பங்குதாரர்களின் 82 லட்சம் பங்குகளை, 'ஓ.எப்.எஸ்.,' முறையிலும் விற்பனை செய்யவுள்ளது. எஸ்.ஆர்.ஐ.டி., இந்தியா நிறுவனம் 1.68 கோடி புதிய பங்குகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதி, நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் கடன்களை குறைப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !