உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  புதிய பங்கு வெளியீட்டின் போது உதவ நிறுவனம் குறித்த எளிய தகவல் புத்தகம்

 புதிய பங்கு வெளியீட்டின் போது உதவ நிறுவனம் குறித்த எளிய தகவல் புத்தகம்

புதிய பங்கு வெளியீட்டுக்கான செயல்முறையை எளிதாக்க, இரண்டு முக்கிய மாற்றங்களை செபி தெரிவித்துள்ளது. பங்குகளை எலக்ட்ரானிக் வடிவில் சேமித்து வைக்கும் டிபாசிட்டரிகள் சந்திக்கும் சிக்கல்களை களையவும், முதலீட்டாளர்களின் நலனை காக்கவும் இந்த மாற்றங்களை அறிவித்துள்ளது. இது குறித்து, டிசம்பர் 4 வரை பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, பின்னர் முடிவு எடுக்கப்படும் என செபி தெரிவித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் பல நுாறு பக்க 'புரியாத' ஆவணங்களுக்கு விடை கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது செபி. லாக் இன் ஐ.பி.ஓ-.,விற்கு முந்தைய காலகட்டத்தில் நிறுவனர்கள் மற்றும் ஆரம்பகட்ட முதலீட்டாளர்கள், தங்களது தனிப்பட்ட அல்லது வணிக தேவைகளுக்காக, தங்கள் பங்குகளை அடமானம் வைப்பதுண்டு. இந்த பங்குகள், நிறுவனம் ஐ.பி.ஓ., வெளியிட்டு, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பின், ஆறு மாதத்திற்கு கட்டாயமாக 'லாக் -இன்' செய்யப்பட வேண்டும். ஆனால், இவற்றை டிபாசிட்டரிகளால் லாக் -இன் செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டு விடுகிறது. அதிக எண்ணிக்கையிலான அல்லது கண்டுபிடிக்க முடியாத பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, இது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. ஆபர் சம்மரி நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிடும்போது, கூடவே பல நுாறு பக்கங்கள் கொண்ட பெரிய ஆவணங்கள் வெளியிடப்படும். இவற்றை பெரும்பாலும் சிறு முதலீட்டாளர்கள் படிக்க மாட்டார்கள். இதனால், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கான தீர்வுகள்  'ஆபர் சம்மரி' எனப்படும் எளிய தகவல் புத்தகத்தை வெளியிடலாம்.  நிறுவனங்களின் பணி, நிதி நிலைமை, ரிஸ்க் போன்ற தகவல்கள் எளிமையாகவும், சுருக்கமாகவும் இருக்கும்  சிறு முதலீட்டாளர்கள் நிறுவனம் குறித்து சரியாக புரிந்து கொண்டு, முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி