உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ரியல் எஸ்டேட்டிலும் வந்தாச்சு ஏ.ஐ.,

ரியல் எஸ்டேட்டிலும் வந்தாச்சு ஏ.ஐ.,

ரியல் எஸ்டேட் துறையில் உதவும் சில ஏ.ஐ.,களின் விபரம்

ரென்ட் - ஓ - மீட்டர்

குடியேற விரும்பும் வீட்டின் நியாயமான வாடகை எவ்வளவு இருக்கும் என கணித்து சொல்லும்; இதன் இன்னொரு வசதியான 'டிராவல் டைம் சர்ச்' அலுவலகம் அல்லது பள்ளிக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் கணக்கிட்டுச் சொல்லும்

ஹவுஸ் ஜி.பி.டி.,

நாம் கேட்கும் கேள்விகளை புரிந்துகொண்டு, ஏற்ற வீடுகளைக் கண்டுபிடித்து தரும். மேலும், அந்த வீட்டின் வாஸ்து எப்படி இருக்கிறது, விலை நிலவரம் போன்ற விபரங்களையும் வழங்கும்

ரென்டென்பே

வாடகை திடீரென உயருமா என்பதை முன்கூட்டியே கண்டுபிடித்து, எச்சரிக்கை வழங்கும்

ஏ.ஐ.,ஹவுஸ் இந்தியா

வீட்டின் உட்புற வடிவமைப்பை பென்சிலால் வரைந்தால், அதை 3டி படமாக சில நிமிடங்களில் மாற்றி தரும்

பிளானர் 5டி அண்டு ஹோம்ஸ்டைலர்

வீட்டின் தள அமைப்பை நாமே எளிதாக உருவாக்கவும், எந்த இடத்தில் என்ன பொருள் வைத்தால் நன்றாக இருக்கும் என்று சோதித்து பார்க்கவும் உதவும்

மாஜிக்பிளான்

மொபைல் போன் கேமராவை பயன்படுத்தி, ஒரு அறையை ஸ்கேன் செய்தால், அந்த அறையின் துல்லியமான வரைபடத்தை 2டி, 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி தரும். ஆதாரம்: ஓ.எல்.எம்., ரிசர்ச்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ