உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இந்தியர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கின்றனரா?

இந்தியர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கின்றனரா?

முதலீடுகளைப் பொறுத்தவரை இந்தியர்கள் ரிஸ்க் எடுக்க விரும்புகின்றனரா; அல்லது, பாதுகாப்பாக மேற்கொள்ள விரும்புகின்றனரா?இந்தியாவின் முதலீட்டுப் பண்பாடு, ரிஸ்க் எடுப்பதை விரும்பாத மனநிலை கொண்டதாகவே நீடிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 80 சதவீத இந்தியக் குடும்பங்கள் மூலதனப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கின்றன.இடர் தாங்கும் திறனுக்கான வரையறைகள் அதிக இடர் தாங்கும் திறன் : நான் அதிக வருமானத்தை விரும்புகிறேன், இடரைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. சிறந்த நீண்ட கால வருமானத்தை அடைய, குறிப்பிடத்தக்க குறுகிய கால இழப்புகளுக்கு நான் தயாராக இருக்கிறேன்.நடுத்தர இடர் தாங்கும் திறன்: நான் சிறந்த, அதிக வருமானத்தை இலக்காகக் கொண்டுள்ளேன், மேலும் எனது முதலீட்டில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதை உணர்ந்துள்ளேன். இருப்பினும், என்னால் குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது.குறைந்த இடர் தாங்கும் திறன்: எனக்கு வருமானத்தை விட முதலீடு செய்த தொகை முக்கியம். மேலும் குறைந்தபட்ச இழப்புகளுடன் நல்ல நிலையான மற்றும் நம்பகமான வருமானத்தை நான் பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை