மியூச்சுவல் பண்டு வர்த்தகத்துக்கு ஆஷிகா குழுமம் வருகிறது
மியூச்சுவல் பண்டு வணிகத்தில் நுழைய, கொல்கட்டாவை பதிவு அலுவலகமாக கொண்ட, வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான, 'ஆஷிகா' குழுமத்துக்கு, சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, சொத்து மேலாண்மை நிறுவனம் அமைப்பதுடன், மியூச்சுவல் பண்டு திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளை இந்நிறுவனம் துவங்கலாம். எனினும், செபியின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே, இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்.