உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஆட்டம்பெர்க், பஞ்சாப் கார்போனிக்

ஆட்டம்பெர்க், பஞ்சாப் கார்போனிக்

இந்தியாவில் முன்னணி வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான 'ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ்' மற்றும் தொழில்துறை வாயுக்கள் மற்றும் கார்பன் சேகரிப்பு சேவைகளை வழங்கும் 'பஞ்சாப் கார்பானிக்' ஆகிய இரு நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வாயிலாக நிதி திரட்ட செபியிடம் ஒப்புதலை பெற்றுள்ளன. ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் நிறுவனம் 450 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகள் மற்றும் 7.65 கோடி பங்குகள் 'ஆபர் பார் சேல்' வாயிலாக வெளியிட்டு நிதி திரட்டுகிறது. திரட்டப்படும் நிதியில் 150 கோடி ரூபாய் விளம்பரம் மற்றும் பிராண்டு விழிப்புணர்விற்கும், 100 கோடி ரூபாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், 90 கோடி ரூபாய் கடன் அடைப்பிற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. 60 லட்சம் புதிய பங்குகள் மற்றும் 35 லட்சம் ஓ.எப்.எஸ்., பங்குகள் விற்பனை வாயிலாக, பஞ்சாப் கார்பானிக் நிறுவனம் திரட்டும் நிதியின் பெரும் பகுதி பிசினஸ் விரிவாக்கத்துக்கும், கடன் செலுத்துதல் மற்றும் பொதுவான கார்ப்பரேட் தேவைகளுக்கும் ஒதுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை