உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / அதிக பிரீமியத்தில் இ.டி.எப்., வாங்குவதை தவிர்க்கலாம்

அதிக பிரீமியத்தில் இ.டி.எப்., வாங்குவதை தவிர்க்கலாம்

வெ ளிநாட்டு சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய, ஓவர்சீஸ் இ.டி.எப்., திட்டங்கள், என்.ஏ.வி.,யை (நிகர சொத்து மதிப்பு) விட அதிக விலையில் வர்த்தகமாவதால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, 'மிரே அசெட் மியூச்சுவல் பண்டு' நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஓவர்சீஸ் இ.டி.எப்., திட்டங்கள், ஏற்கனவே அவற்றின் என்.ஏ.வி.,யை விட கிட்டத்தட்ட 20 சதவீத பிரீமியத்தில் வர்த்தகமாகின்றன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல், இ.டி.எப்.,களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பழைய விதிகளின்படி, இ.டி.எப்., என்.ஏ.வி.,க்கும் சந்தை விலைக்கும் இடையே 20% வரை வித்தியாசம் இருக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், புதிய விதிகளின்படி, இ.டி.எப்., விலை வரம்புகள், முந்தைய நாளின் இறுதி விலை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால், ஓவர்சீஸ் பண்டுகளின் பிரீமியம் 20 சதவீத கட்டுப்பாட்டை தாண்டி, மேலும் உயர வாய்ப்புள்ளது. இதுபற்றி மிரே அசெட் தெரிவித்துள்ளதாவது: அதிக விலை நிரந்தரமானது அல்ல. பிரீமியம் திடீரென சரிந்து என்.ஏ.வி.,க்கு திரும்பும் போது, அதிக விலை கொடுத்த முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே, இ.டி.எப்., வாங்கும் முன், முதலீட்டாளர்கள் தோராயமான என்.ஏ.வி.,யுடன் (ஐ.என்.ஏ.வி.,) சந்தை விலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதிக பிரீமியத்தில் வாங்குவதை தவிர்க்கலாம். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி