உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பாட்டா பங்கு 18 சதவிகிதம் உயர்வு

 பாட்டா பங்கு 18 சதவிகிதம் உயர்வு

'பா ட்டா இந்தியா' நிறுவனத்தின் தலைமை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பை தொடர்ந்து, அதன் பங்கு விலை நேற்று வர்த்தகத்தின் போது 18 சதவீதம் வரை உயர்ந்து 803 ரூபாய் வரை சென்றது. இதற்கு முன் கடந்த 2006, மே 23 அன்றுதான் இப்பங்கு இந்த அளவிற்கு உயர்ந்திருந்தது. இது, 20 ஆண்டுகளில் சந்தித்த மிகப்பெரிய ஒரு நாள் உயர்வாகும். வர்த்தக முடிவில், இப்பங்கு 16.54 சதவீத உயர்வுடன் 790.45 ரூபாய் என்ற அளவில் நிலைபெற்றது. இருப்பினும், அதன் 52 வார உச்ச விலையான 1,287.85 ரூபாயை விட 39 சதவீதம் குறைவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !