உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐ.பி.ஓ., வருகிறது காசாகிராண்டு

ஐ.பி.ஓ., வருகிறது காசாகிராண்டு

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த 'காசாகிராண்டு' நிறுவனம், புதிய பங்கு வெளியீடுவதற்கான வரைவை செபியிடம் தாக்கல் செய்துள்ளது.இதனை செபி தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. புதிய பங்கு வெளியீடு வாயிலாக இந்நிறுவனம் 1,220 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக, 1,200 கோடி ரூபாயும்; ஆபர் பார் சேல் வாயிலாக 20 கோடி ரூபாயும் திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக பெறப்படும் தொகையை, கடன்களை அடைப்பதற்கும், நிறுவன திட்டங்களின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !