உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / சி.ஏ.எஸ்., விதிகளில் மாற்றம்

சி.ஏ.எஸ்., விதிகளில் மாற்றம்

சி .ஏ.எஸ்., கட்டமைப்பு விதிமுறைகளை மாற்றியுள்ளதாக செபி அறிவித்து உள்ளது. இதன்படி, 3.30 மணி வரை பங்குகளை வாங்கி, விற்க இயலும். பங்குகளின் முடிவு விலையை தீர்மானிக்க, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி முதல் பங்கு பிரிவில் ‘சி.ஏ.எஸ்.,’ எனப்படும் ‘முடிவு ஏல அமர்வு’ முறையை செபி அறிமுகப்படுத்தியது. இதனால் பங்கு விலைகளில் ஏற்படும் அதீத மாற்றங்கள் குறித்து சந்தை பங்கேற்பாளர்கள் கவலை தெரிவித்ததை தொடர்ந்து, சி.ஏ.எஸ்., கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்து செபி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

புதிய மாற்றங்கள்

 10 நிமிட முடிவு ஏல அமர்வு, அனைத்து வர்த்தக நாட்களிலும் பிற்பகல் 3:30 மணி முதல் 3:40 மணி வரை செயல்படும்  இண்டெக்ஸ் மற்றும் பங்கு டெரிவேட்டிவ்களின் வர்த்தகம் பிற்பகல் 3:45 மணி வரை தொடரும். காலாவதியாகும் குறியீட்டு டெரிவேட்டிவ்களுக்கு சில விதிவிலக்குகள் வழங்கப்படும்  காலாவதி நாட்களில் 3:30 மணிக்கு இண்டெக்ஸ் டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களின் வர்த்தகம் நிறுத்தப்படும்  குறியீடு மற்றும் பங்கு டெரிவேட்டிவ்களுக்கான காலாவதி நாள் தீர்வு விலை, கடைசி 30 நிமிட வர்த்தகத்தின் சராசரி விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்  முடிவு ஏல அமர்வுக்கான குறிப்பு விலை, கடைசி 15 நிமிட வர்த்தகத்தின் சராசரி விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும். இந்த புதிய விதிமுறைகள் வரும் டிசம்பர் 7ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதற்கு ஏற்ப பங்கு சந்தைகளும், ‘கிளியரிங்’ நிறுவனங்களும் செயல்பாட்டு நடைமுறைகளை மாற்றும்படி செபி அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை