சாய்ஸ் மியூச்சுவல் பண்டு தங்க இ.டி.எப்., அறிமுகம்
'சாய்ஸ் மியூச்சுவல் பண்டு' நிறுவனம் புதிய தங்க இ.டி.எப்., திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதலீடு செய்யலாம். விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அடுத்த ஒரு வாரத்துக்குள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இந்த பண்டு பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குறைவான விலையில் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்கும் விதமாக தங்க இ.டி.எப்., திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சாய்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.