உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / கமாடிட்டி சந்தை

கமாடிட்டி சந்தை

அலுமினியம்

சர்வதேச சந்தையில், அலுமினியத்தின் விலை, கடந்த இரு வாரங்களாக சரிவில் வர்த்தகம் ஆகிறது. உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. கடந்த வாரத்தில் ஒரு டன் 2,720 அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருந்து, தற்போது விலை சரிந்து, ஒரு டன் 2,640 டாலராக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் உலகளாவிய அலுமினியம் உற்பத்தி 0.1 சதவீதம் உயர்ந்தது. உற்பத்தி அதிகரித்திருந்தாலும், உள்ளூர் மற்றும் உலக சந்தைகளில் தேவை குறைவதால், அலுமினியத்தின் விலை மெல்ல குறைந்தது. சீனாவிலும் அமெரிக்காவிலும் உற்பத்தி செயல்பாடுகள் மந்தமடைதலும், உள்நாட்டு வினியோகம் அதிகரித்ததும் விலைகளுக்கு அழுத்தமாக இருந்தது.

தங்கம், வெள்ளி

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், சர்வதேச சந்தையில் புதிய வரலாற்று உச்சத்தை மீண்டும் எட்டி, வர்த்தகமாகி வருகிறது. ஒரு அவுன்ஸ் அதாவது 31.10 கிராம் தங்கம் 3,791 டாலராகவும்; வெள்ளி ஒரு அவுன்ஸ் 44.50 டாலராகவும் உள்ளது இந்தியாவில் தங்கத்தின் விலை, இதுவரை இந்த ஆண்டில் 47 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் இரண்டு வட்டி விகிதக் குறைப்புகளை சந்தை முன்கூட்டியே கணித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் தகவலின்படி, அக்டோபரில் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி குறையும் வாய்ப்பு 90 சதவீதம் என்றும், இந்த ஆண்டின் டிசம்பரில் மேலும் ஒரு குறைப்பு நடைபெறும் வாய்ப்பு 75 சதவீதம் என்றும் முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். கே.முருகேஷ் குமார்துணைத்தலைவர்,சாய்ஸ் புரோக்கிங் பிரைவேட் லிமிடெட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி