உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / கமாடிட்டி

கமாடிட்டி

கச்சா எண்ணெய்

ச ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் ஒரு பேரல் கிட்டத்தட்ட 5 அமெரிக்க டாலர்கள் சரிந்து 60.40 டாலர் என்ற நிலையை எட்டியது. தற்போது ஒரு பேரல் விலை 61.40 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேவைக்கு அதிகமாக சந்தையில் உற்பத்தி அதிகரித்தது மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொய்வு, இதனால் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டது மற்றும் அரசாங்கத்தில் நிலவிவரும் அசாதாரண சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு

இ யற்கை எரிவாயு விலை, சர்வதேச சந்தையில் கடந்த இரு வாரமாக உயர்ந்து காணப்படுகிறது. இன்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி தகவலின்படி செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இயற்கை எரிவாயு கையிருப்பு எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவே அதிகரித்தது. அக்டோபர் மாதத்தின் முதல்பகுதி தட்பவெட்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீடு மற்றும் அலுவலகங்களில் சூடாக்க பயன்படும் இயற்கை எரிவாயு தேவை அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை