உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  கிரெடிட் கார்டு தொடர்பான புகார்கள் 20% அதிகரிப்பு

 கிரெடிட் கார்டு தொடர்பான புகார்கள் 20% அதிகரிப்பு

கி ரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், 2024 - -25ம் நிதியாண்டில் 50,811 புகார்கள் பெறப்பட்டிருப்பது, ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பாளர் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரியவந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களைவிட 20 சதவீதம் அதிகம். ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பாளரிடம் மொத்தமாக பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 2.96 லட்சமாக உள்ள நிலையில், இதில், கிரெடிட் கார்டுகள் தொடர்பான புகார்கள் 17 சதவீதமாவும், தனியார் வங்கிகள் குறித்த புகார்கள் 64 சதவீதமாகவும் உள்ளன. புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் வழங்கும் கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது போன்றவையே, புகார்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என துறைசார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி