ஆதார் - பான் இணைப்புக்கு டிச., 31ம் தேதி கடைசி நாள்
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேதிக்குள் இணைக்காத பான் அட்டைகள், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயலற்றதாகிவிடும் என்று, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது யாருக்கு பொருந்தும்? குறிப்பாக, 2024 அக்., 1-க்கு முன்னர் ஆதார் பதிவு அடையாள எண்ணைப் பயன்படுத்தி, பான் பெற்ற தனிநபர்களுக்கு இது பொருந்தும். காலக்கெடுவுக்கு பின் கட்டணம் டிசம்பர் 31-க்கு பின் விண்ணப்பித்தால், 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், மேலும் இணைப்பு செயல்பாட்டிற்கு 30 நாட்கள் வரை காத்திருக்க நேரிடும். இதனால் உரிய நேரத்தில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் போகலாம். பான் கார்டு செயலிழந்தால் * வருமான வரி தாக்கல் செய்ய முடியாது * ரீபண்டு திரும்பப் பெற முடியாது * வங்கி, மியூச்சுவல் பண்டு பங்குச்சந்தை போன்றவற்றில் நிதி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்படும் * வங்கிகள், தரகு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களால் கே.ஒய்.சி., சரிபார்ப்பு நிராகரிக்கப்படும் * இதனால் எஸ்.ஐ.பி., டிமேட் கணக்குகள், டெபாசிட்கள் பாதிக்கப்படலாம் * டி.டி.எஸ்., - டி.சி.எஸ்., அதிக விகிதத்தில் பிடித்தம் செய்யப்படும். இணைக்கும் முறை வருமான வரித் துறையின் இ-பைலிங் போர்ட்டலில் பான் மற்றும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, ஓ.டி.பி., வாயிலாக சரிபார்ப்பு செய்து இணைக்கலாம்.