உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  நல்ல துவக்கம் தந்த டி.எம்.சி.வி., பங்குகள்

 நல்ல துவக்கம் தந்த டி.எம்.சி.வி., பங்குகள்

சமீபத்தில் 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தில் இருந்து, தனியாக பிரிந்த 'டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிக்கிள்' பங்குகள், நேற்று பங்கு சந்தையில் பயணத்தை துவங்கின. டி.எம்.சி.வி., என்ற ஸ்டிக்கரில் வர்த்தகத்தை துவக்கிய நிலையில், முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிறுவனம் பிரிக்கப்பட்ட பின், பங்கு விலை 260.75 ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், நேற்று 28 சதவீதம் உயர்வு கண்டு, தேசிய பங்கு சந்தையில் 335 ரூபாய்க்கு வர்த்தகத்தை துவங்கியது. வர்த்தக நேர முடிவில், டி.எம்.சி.வி., பங்கு மதிப்பு 1.50 சதவீதம் குறைந்து, 330 ரூபாயாக இருந்தது. அதேநேரம், மும்பை பங்கு சந்தையில் 330.25 ரூபாய்க்கு வர்த்தகத்தை துவங்கிய டி.எம்.சி.வி., இறுதியில் 0.79 சதவீதம் குறைந்து, பங்கு ஒன்றின் விலை 327.65 ரூபாய்க்கு நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை