உள்ளூர் செய்திகள்

துளிகள்

எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 95 டாலருக்கு கீழ் சரிந்ததால், எண்ணெய், விமான போக்குவரத்து, பெயின்ட் மற்றும் டயர் நிறுவன பங்குகள் நேற்று உயர்ந்தன. 'ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' 3.74 சதவீதம், 'பாரத் பெட்ரோலியம்' 4.07 சதவீதம், 'இண்டிகோ' 5.43 சதவீதம், 'அப்போலோ டயர்ஸ்' 4.09 சதவீதம் ஏற்றம் கண்டன. வாகன பங்குகள் உயர்வு கச்சா எண்ணெய் விலை சரிந்ததன் எதிரொலியாக வாகன நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. 'டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிகிள்ஸ் 6.52 சதவீதம்; அசோக் லேலண்டு' நிறுவன பங்குகள் 10.50 சதவீதமும் உயர்ந்தன. 'மாருதி சுசூகி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா' நிறுவன பங்குகள் 5 சதவீதத்துக்கு மேலும் அதிகரித்து காணப்பட்டன. நகை கடன் நிறுவனங்கள் ஏற்றம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை இரண்டு வார உச்சத்தை எட்டியதால், நகை கடன் நிறுவன பங்குகள் உயர்ந்தன. 'முத்துாட் பைனான்ஸ்' 4.77 சதவீதம், 'மணப்புரம் பைனான்ஸ்' 3.76 சதவீதம், 'ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ்' 4.55 சதவீதமும் உயர்ந்தன. அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பத்திர வருவாய் குறைவு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு ஆதரவாக அமைந்தன.Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ