என்.எப்.ஓ.,
டாப் 10 பேங்க்ஸ் இ.டி.எப்., 'பஜாஜ் பின்சர்வ்' அறிமுகம் 'ப ஜாஜ் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனம், 'பஜாஜ் பின்சர்வ் பி.எஸ்.இ., டாப் 10 பேங்க்ஸ் இ.டி.எப்.,' என்ற புதிய என்.எப்.ஓ., திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.இ., 500 குறியீட்டில் இடம்பெற்றுள்ள முன்னணி 10 வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்யும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு வங்கி பங்கின் எடை 33 சதவீதத்துக்கும், முதல் மூன்று வங்கிகளின் மொத்த எடை 63 சதவீதத்துக்கும் மிகாத வகையில் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்.எப்.ஓ., காலம்: ஜுலை 13 - 15, 2026 குறைந்தபட்ச முதலீடு: ரூ.500