ரூபாய் மதிப்பு நேற்று சிறிதளவு பலவீனம்அடைந்து, 88.62 என்ற அளவில் முடிந்தது. இந்தியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்து வருவதாகவும், இது முன்பு இருந்ததைவிட வேறுபட்டது என்பதால், இந்தியா விரைவில் அதை ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் நம்பிக்கை ஊட்டும் கருத்துகள் ரூபாய்க்கு சாதகமாகவே உள்ளன. அமெரிக்க தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு களை குறைத்துள்ளன என, ஏ.டி.பி., வெளியிட்ட அறிக்கையால், டாலர் பலவீனமடைந்தது. இதனால், வரும் டிசம்பரில் அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்கும் வாய்ப்பு உள்ளது என்ற கணிப்பு, 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. எம்.எஸ்.சி.ஐ., குளோபல் இண்டெக்ஸில், 'போர்ட்டீஸ் ஹெல்த்கேர், ஜி.இ., வெர்னோவா டி அண்டு டி இந்தியா, பேடிஎம், சீ மென்ஸ் எனர்ஜி இந்தியா' ஆகிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது, நவ., 24ம் தேதி சந்தை முடிந்த பிறகு அமலுக்கு வருகிறது. இதனால், இந்தியாவுக்கு 13,000 கோடி ரூபாய் மதிப்பில், அன்னிய முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது, ரூபாய்க்கு கூடுதல் ஆதரவை ஏற்படுத்தும். இதுபோன்ற சாதகமான சூழலால், ரூபாய் மதிப்பு 88.40-ல் முக்கிய ஆதரவை கொண்டுள்ளது. இது தகர்ந்தால், ரூபாய் மதிப்பு மேலும் வலுப்பெற்று 88.00ல் இருந்து- 87.70 வரை செல்லலாம். இதுவே, ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்தால் 88.70 -- 88.80 என்ற அளவில் தடுக்கப்பட வாய்ப்புள்ளது.