உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வெளிச்சம் காட்டும் அன்னிய முதலீடு வரத்து

வெளிச்சம் காட்டும் அன்னிய முதலீடு வரத்து

இ ந்திய ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று ஏற்ற இறக்கத்தைக் கண்டு, முடிவில் பெரிய அளவில் மாற்றமின்றி இருந்தது. அந்நிய முதலீட்டு வரத்து, உயரும் எரிசக்தி செலவுகள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையைச் சந்தை பிரதிபலித்தது. மேம்பட்ட நம்பிக்கை, அதிகளவிலான அன்னிய முதலீடு, ரூபாய்க்கான அதிக தேவை, வலுவான ரூபாய் மதிப்பு ஆகியவை சாதகமான அம்சங்களாக உள்ளன. ஆனால், அட்லாண்டிக் கடலுக்கு அப்பால், அமெரிக்காவில் சூழ்நிலை அவ்வளவு அமைதியாக இல்லை. நடந்து கொண்டிருக்கும் அரசாங்க முடக்கம், இதன் காரணமாக தாமதமான செப்டம்பர் மாதத்தின் நுகர்வோர் விலைக் குறியீடு போன்ற பல விஷயங்கள் டாலரின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இது, ரூபாய் போன்ற வளர்ந்து வரும் சந்தை நாணயங்களுக்கு மறைமுகமாக உதவுகிறது. இருப்பினும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தச் சூழ்நிலைக்கு மத்தியில், அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தக ஒப்பந்த விஷயத்தில் இந்தியா அவசரம் காட்டாது என தெரிவித்துள்ளார். இது, கொள்கை சுதந்திரத்தை வலியுறுத்தும் ஒரு நிலைப்பாடு. ஆனால், அமெரிக்க வர்த்தகப் பேச்சுகளில் எழும் தாமதம் ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். தற்போதைக்கு, ரூபாய் 87.50-க்கு கீழே சரிந்தால், அது குறுகிய காலத்தில் 86.80 - 87.00 நோக்கி நகரக்கூடும். மறுபுறம், 88.30 - 88.40 என்பதை சுற்றி எதிர்ப்பு நீடிக்கிறது. அமித் பபாரிநிர்வாக இயக்குநர்,சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை