மேலும் செய்திகள்
ஃ போரக்ஸ்: ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயரக்கூடும்
16-Oct-2025
இந்திய ரூபாயின் போக்கு, கடந்த இரண்டு நாட்களாக நல்ல முன்னேற்றம் கண்டு, அடுத்த கட்ட உயர்வுக்கு தயாராகி வருவதைக் காட்டுகிறது. உள்நாட்டு வளர்ச்சி: இந்தியாவின் தொழில் உற்பத்தி செப்டம்பரில் 4% வளர்ச்சியடைந்துள்ளது. இது சந்தை எதிர்பார்த்ததை விட அதிகம். உற்பத்தித் துறை வளர்ச்சி 4.8% என்பது உள்நாட்டுப் பொருளாதாரத்தின் பலத்தைக் காட்டுகிறது. ஆர்.பி.ஐ., நடவடிக்கை: நாளை 32,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுப் பத்திரங்களை ஆர்.பி.ஐ., ஏலம் விட உள்ளது. இந்த நடவடிக்கை, சந்தையில் உள்ள பணப்புழக்கத்தை தற்காலிகமாக குறைத்து, ரூபாயின் தேவையை அதிகரித்து, வலு சேர்க்கும். டாலரின் சோர்வு: அமெரிக்காவில் நுகர்வோர் நம்பிக்கை குறைந்துள்ளதால், அமெரிக்க டாலர் பலவீனமடைந்துள்ளது. ஒரே சவால்: ரஷ்யா மீதான உலகளாவிய தடைகளால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் இறக்குமதி அதிகமுள்ள இந்தியாவுக்கு, அதிக விலை என்பது, ரூபாயின் மதிப்பை பாதிக்கக்கூடியதாகும். முக்கிய நிலைகள்: 88.40 என்ற அளவில் ரூபாய் வலுவான எதிர்ப்பை சந்திக்கிறது. இந்த அளவைத் தாண்டினால், மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது. 87.60 முதல் 87.70 வரை ரூபாய்க்கு முக்கிய ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு நிலைக்கு கீழ் சரிந்தால், அது 87.20-ஐ நோக்கிச் செல்லலாம். அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்புக்கான அறிவிப்பை பொறுத்து சந்தை அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
16-Oct-2025