உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  அக்ரஸிவ் ஹைபிரிடு பண்டுகளில் அதிகரித்து வரும் ஆர்வம்

 அக்ரஸிவ் ஹைபிரிடு பண்டுகளில் அதிகரித்து வரும் ஆர்வம்

ம ு தலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி வருவதால், 'அக்ரஸிவ் ஹைபிரிடு மியூச்சுவல் பண்டு'களின் கீழ் நிர்வகிப்படும் சொத்து மதிப்பு, கடந்த அக்டோபரில் 2.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது கடந்தாண்டு, இதே காலத்தோடு ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும். சிறப்பம்சம் என்ன? இது, அதிக வருமானத்தை இலக்காகக் கொண்டது. பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் என இரண்டு சொத்துக்களில் இருந்து பயன் பெறும். செபி விதிகளின்படி, மொத்த முதலீட்டில் 65 -- 80 சதவீதம் வரை பங்குகளிலும், மீதமுள்ள 20 - 35 சதவீதம் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய வேண்டும். லாபத்தின் பகுதியை மாதாந்திர டிவிடெண்ட் ஆக பெறும் வசதி இருப்பது சிறப்பம்சம். இருப்பினும், பல் வகைப்பட்ட சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த பண்டு ஏற்றதல்ல. லாபம் ஓராண்டில் 7% 2 ஆண்டுகளில் 16.50% 5 ஆண்டுகளில் 17% ஆண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (ரூ.லட்சம் கோடி) 2024 2.21 2025 2.50 13% உயர்வு அக்டோபர் நிலவரம் ஆதாரம்: ஆம்பி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி