ஹெச்.ஏ.எல்., பங்கு விலை கடும் சரிவு!
பொ துத்துறையைச் சேர்ந்த 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனத்தின் பங்கு விலை, நேற்று வர்த்தக முடிவில் 5.67 சதவீதம் வரை சரிந்து 4,217 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ஏ.எம்.சி.ஏ., திட்டத்தை பெறுவதற்கான போட்டியிலிருந்து இந்த நிறுவனம் விலகியுள்ளதாக வெளியான தகவலே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த சரிவின் காரணமாக, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட18,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.