ஹொனாசா கன்ஸ்யூமர் 12 சதவீதம் உயர்வு
'மாமாஎர்த்' உள்ளிட்ட அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் 'ஹொனாசா கன்ஸ்யூமர்' நிறுவன பங்குகள் வர்த்தகத்தின் இடையே 12% வரை உயர்ந்தது. நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு இரட்டை இலக்க அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகர விற்பனை மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 30% மேல் உயரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே பங்குகள் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. வர்த்தக நிறைவில் இந்நிறுவன பங்கு 8.19% உயர்ந்து 478.30 ரூபாயாக முடிந்தது.