மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ., ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்
19-Aug-2026
டவுனு: என்ன அப்பு, நியுட்ரன் ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது? அப்பு: கடைசி ரெண்டு நாள் ஏற்றம் கண்டதுல நியுட்ரன் கொஞ்சம் வியாபாரம் பண்ணியிருக்காரு. அதுனால ஒரு சந்தோஷம். அவர் சந்தோஷத்தை பார்த்து எனக்கும் ஒரு சந்தோஷம். நியுட்ரன் : அட! வியாபாரம் பண்ணீட்டாலும்.., ஏதோ பேருக்கு ஒன்னு ரெண்டு வியாபாரம் பண்ணுனேன். அதைப்போய் பெரிசா பேசுறீங்களே அப்பு? அப்பு: வேடிக்கை மட்டுமே பார்க்கற ஆள் ஒரே ஒரு வியாபாரம் பண்ணுனாலும் அது எனக்கு பெரிசுதான். நியுட்ரன்: ஒப்பனிங்கிலேயே காலாய்க்கிறீங்களே! டவுனு: வாராந்திர ரீதியா 114 புள்ளிகள் இறங்கித்தான் இருக்குது. அதை மறந்துடாதீங்க. நியுட்ரன்: ஆனாலும் அன்றாடம் சராசரியா கிட்டத்தட்ட 100 புள்ளிகள் வரையிலுமான 'ஸ்விங்' இருந்துச்சு. வாராந்திர அளவுல உச்சத்துக்கும் குறைவுக்கும் நடுவே 334 புள்ளிகள் வித்தியாசம் இருந்துச்சு. இதையும் ஞாபகம் வச்சுக்குங்க. டவுனு: வர்ற வாரத்துல 'எம்-3' பணப்புழக்கம், இண்டஸ்ட்ரியல் மற்றும் மேனுபேக்சரிங் புரொடக்ஷன், வங்கிகளில் உள்ள வைப்புநிதி மற்றும் அவை வழங்குன கடனின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலவாணி கையிருப்பு மாதிரியான பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கு. 'எஸ் அண்டு பி.,/கேஸ்-ஷில்லர்' வீட்டு விலைகள், 'சிபில் கன்ஸ்யூமர் கான்பிடன்ஸ்', புதிய வீடுகள் விற்பனை, 'கோர் பி.சி.இ., இண்டெக்ஸ், டியூரபிள் குட்ஸ் ஆர்டர்கள்', தனிநபர் வருமானம், தனிநபர் செலவுகள், வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை, 'மிச்சிகன் கன்ஸ்யூமர் சென்டிமெண்ட்' போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது. நியுட்ரன்: வர்ற வாரம் ஆகஸ்ட் மாத 'எப் அண்டு ஒ., எக்ஸ்பைரியும்' நடக்க இருக்குது. அப்பு: முதல் இரண்டு நாள் அதுக்கு ஏத்த மாதிரியான ஏற்ற இறக்கம்தான் இருக்க வாய்ப்பிருக்குது. நியுட்ரன்: நிப்டிக்கு 24,065/23,878/23,750 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 24,400/24,547/24,675 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 24,213-தான் வாராந்திர அளவுல மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும். அப்பு: வாரத்துல முதல் ரெண்டு நாளைக்கு சப்போர்ட் ரெசிஸ்டென்ஸெல்லாம் ஒன்னும் வேலை செய்யாது. நியுட்ரன்: என்ன இப்படி சொல்லீட்டீங்க? டவுனு: அவர் சரியாத்தாங்க சொல்றாரு. புதன்கிழமைக்கு மேலேதான் இதெல்லாம் ஒர்க்-அவுட் ஆகும். நியுட்ரன்: அப்ப வர்ற வாரம் எப்படித்தான் இருக்குமுன்னு நீங்க நினைக்கிறீங்க அப்பு? அப்பு: டவுனுக்கும் எனக்கும் சரிக்கு சமமா வாய்ப்பு இருக்குமுன்னு தோணுது. நியுட்ரன்: அப்ப எனக்கு வாய்ப்பேயிருக்காதா? அப்பு: இதை நான் என் வாயால சொல்லவும் வேண்டுமா? டவுனு: வருத்தப்படாதீங்க நியுட்ரன், வார இறுதியில கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தா உங்க கண்ட்ரோல்ல சந்தை இருந்தமாதிரி இருக்கும். நியுட்ரன்: ஆறுதல் பரிசெல்லாம் வேண்டாங்க. அப்பு: அப்ப ஆறுதல் மட்டும் போதுமா? நியுட்ரன்: கிண்டலை விடுங்க. உங்க எதிர்ப்பார்ப்பு என்னன்னு சொல்லுங்க. டவுனு: 'டெக்னிக்கல்கள்' ஒன்றுக்கு ஒன்னு முரண்பாடா இருக்குது. வெகு சில விஷயங்களே ஏற்றத்துக்கு சாதகமா இருக்குது. நியுட்ரன்: ஓ! அதனாலதான் முதல் இரண்டு நாள் 'சப்போர்ட்/ரெசிஸ்டென்ஸெல்லாம்' வேலை செய்யாதுன்னு ஒரே போடா போட்டுட்டாரா அப்பு? டவுனு: 'எப் அண்டு ஓ., எக்ஸ்பைரிக்கு' அப்புறம்தான் சந்தையோட உண்மையான திசை தெரிய ஆரம்பிக்கும். நியுட்ரன் : இது வேறயா? அப்பு: செய்திகளோட தாக்கமும் பெரிய அளவில இருக்க வாய்ப்பிருக்கு. நியுட்ரன்: அடுக்கிகிட்டே போறீங்களே? அப்பு: இதையெல்லாம் மனசுல வச்சுக்கணுமுன்னு சொல்றேன். டவுனு: தெளிவில்லாத டெக்னிக்கல் சூழல்தான் இதற்கெல்லாம் காரணமா இருக்குது. அப்பு: தெளிவு வர்றதுக்கு 24,500-க்கு மேலே இரண்டு மூன்று நாள் நிறைவடையனும். டவுனு: அதுக்கு இந்த வாரம் வாய்ப்பிருக்க மாதிரி தெரியல! அப்பு: செய்திகள் சாதகமா இருந்தா மட்டும்தான் இது நடக்கும். குழப்பமான சூழலைப்பத்தி பேசிப்பேசி தலை வலிக்குது. வாங்க சூடா ஒரு காபி சாப்பிடுவோம் என்று அப்பு அழைக்க மூவரும் ஹோட்டலை நோக்கி கிளம்பினர்.
19-Aug-2026