ரயில் பயணத்தில் எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்?
ரயிலில் தங்கத்தை எடுத்து செல்வதற்கென, தனியாக விதி எதையும் ரயில்வே கொண்டிருக்கவில்லை. மற்ற உடைமைகளுக்கான எடையளவு எவ்வளவோ, அந்த அதிகபட்ச எடை வரை, தங்கத்தை கொண்டு செல்வதில் தடை ஏதும் இல்லை. ரயில் பயணத்தின்போது, பயணிக்கும் வகுப்புக்கு ஏற்ப, பயணியருடன் அவர்களது உடைமைகள் எடை அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. உதாரணமாக, இரண்டாம் வகுப்பு என்றால், அதிகபட்சம் 35 கிலோ உ டைமைகள் கொண்டு செல்லலாம். ஆனால், அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக உடைமைகள் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தால், ரயில்வே அதிகாரிகள் பல மடங்கு பயண கட்டணம் வசூலிப்பர். சில குறிப்பிட்ட தருணங்களில், அபராதமும் விதிக்கப்படலாம். அதுதான் தங்கத்துக்கும் பொருந்தும். ரயிலில் உடமைகள் எடை அளவு: முதல் வகுப்பு 70 கிலோ ஏசி 2 அடுக்கு 50 கிலோ ஏசி 3 அடுக்கு 40 கிலோ 2ம் வகுப்பு, படுக்கை வசதி 40 கிலோ பொது வகுப்பு 35 கிலோ