ஐ.ஐ.எப்.சி.எல்., – ஐ.பி.ஓ., வருகிறது
பொதுத்துறை நிறுவனமான ‘ஐ.ஐ.எப்.சி.எல்.,’ பங்குகளை ஐ.பி.ஓ., வாயிலாக வெளியிடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டில் ஏற்கனவே இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது செபியிடம் முறையாக விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் புதிய பங்குகளை வெளியிடுவதுடன், மத்திய அரசும் தனது பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.