உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இந்தியாவில் அதிகரித்து வரும் அன்னிய முதலீட்டாளர்கள் பதிவு

இந்தியாவில் அதிகரித்து வரும் அன்னிய முதலீட்டாளர்கள் பதிவு

இ ந் தியாவில் இருந்து தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறுவது கவலையளிப்பதாக இருந்தாலும், அன்னிய முதலீட்டாளர்களாக பதிவு செய்து கொள்ளும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சந்தை கட்டுப் பாட்டாளரான செபி தெரிவித்துள்ளது. செபி அமைப்பின் முழுநேர உறுப்பினர் அனந்த் நாராயண் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும், 100 அன்னிய முதலீட்டாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், முதலீட்டாளர்களாக பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஒட்டுமொத்த அன்னிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை தற்போது 12,000க்கும் மேல் தாண்டி விட்டது. கடந்தாண்டு இது, 10,500 என்றளவில் இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தாண்டு பங்குகள், கடன் பத்திரம், மியூச்சுவல் பண்டுகள் மற்றும் மாற்று முதலீட்டு பண்டு உள்ளிட்ட பிரிவுகளில், கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். கடந்த செப்., 12 நிலவரப்படி, பங்குகளில் இருந்து மட்டும் 1.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி