உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இந்தியாவில் 34,600 டன் தங்கம் உலகின் தேவையில் 26 சதவீதம்

இந்தியாவில் 34,600 டன் தங்கம் உலகின் தேவையில் 26 சதவீதம்

க டந்த ஜூன் மாத நிலவரப்படி, நம் நாட்டில் மொத்தம் 34,600 டன் தங்கம் இருப்பதாக, 'மோர்கன் ஸ்டான்லி' அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதாவது ஜி.டி.பி.,யில், இது 88.80 சதவீத பங்கு வகிப்பதாகவும்; இப்போதைய மொத்த பங்குகள் மதிப்பை விட இது 3.10 மடங்கு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. தங்கத்துக்கு உலகின் முக்கிய சந்தையாக விளங்கும் இந்தியாவில், பொருளாதார காரணிகள் மற்றும் முதலீட்டு தேவையால், தங்கம் அதிகளவில் வாங்கப்படுவதாக, அறிக்கை தெரிவிக்கிறது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி, உலகின் மொத்த தங்கம் தேவையில், இந்தியா 26 சதவீத பங்கு வகிக்கிறது. அதில் மூன்றில் இரண்டு பங்கு, நகைகளுக்கான தேவையாக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி