உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கும் ‘இன்போசிஸ்’

ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கும் ‘இன்போசிஸ்’

‘ இ ன்போசிஸ்’ நாட்டின் 2வது மிகப்பெரிய ஐ.டி., நிறுவனமாக உள்ளது. இதற்கு, 200க்கும் மேற்பட்ட ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளன. கடந்த 2025–26ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 20 பில்லியன் டாலர் (ரூ.1,78,650 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் இந்நிறுவனத்தில் 3.28 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். செயல்பாடு  2019–20 முதல் 2025–26 வரையிலான காலகட்டத்தில், வருவாய் ரூபாய் மதிப்பில் 11.90 சதவீதம் (சி.ஏ.ஜி.ஆர்.,) அதிகரித்துள்ளது  டிஜிட்டல் தளங்கள், சுயசேவை தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மாற்றங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்தன  டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ், கிளவுட் உள்கட்டமைப்பு மற்றும் வணிக செயல்பாடுகளை, முழுமையான டிஜிட்டல் திறன்களாக மாற்றுவதில் கவனம் செலுத்தியது  அமெரிக்க சந்தையை மையமாக கொண்ட நிதிச்சேவைகள் துறை, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தது  ஆட்டோமொபைல், விண்வெளி மற்றும் தொழில்துறை பிரிவுகளில் சந்தை பங்கை அதிகரித்து கொண்டது  நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 21.30 சதவீதத்திலிருந்து 2021–22ம் நிதியாண்டில் உச்சபட்சமாக 23 சதவீதத்தை எட்டியது  ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்ததால், நிறுவனம் அவர்களை மிக அதிகளவில் பயன்படுத்தியது. பயிற்சியாளர்கள் தவிர, ஊழியர்களின் பணி பயன்பாட்டு விகிதம் 84.70– 86% என்ற உச்சத்தை எட்டியது. சவால்கள்  2024–25: அதிக பணவீக்கம், உச்சகட்ட வட்டி விகிதங்கள், முக்கிய நாடுகளின் தேர்தல்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், வாடிக்கையாளர்கள் செலவுகளை குறைத்தனர். புதிய மெகா ஒப்பந்தங்களின் ஆரம்பகட்ட செலவுகள் லாப வரம்பை பாதித்தன  2025–26: நிறுவனம் டாலர் மதிப்பில் 5% வளர்ச்சியை பதிவு செய்தது. பெரிய ஒப்பந்தங்கள், ஏ.ஐ., சார்ந்த மாற்றங்கள் மற்றும் பழைய தொழில்நுட்பங்களை நவீனமயமாக்குதல் ஆகியவற்றால் நிதி சேவைகள் துறை 4% வளர்ந்தது.  2026–27: பெரிய ஒப்பந்தங்களின் மதிப்பு அதிகரித்த போதிலும், வருவாய் வளர்ச்சி 1.5% முதல் 3.5% வரை மட்டுமே இருக்கும் என இன்போசிஸ் கணித்துள்ளது. ஏ.ஐ., தாக்கம்  ஏ.ஐ.,க்கு முன்னுரிமை அளிக்கும் சேவைகள் மற்றும் தளங்களின் தொகுப்பாக ‘இன்போசிஸ் டோபாஸ்’ கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது  பாரம்பரிய ஐ.டி., சேவைகளிலிருந்து ஏ.ஐ.,க்கு மாறுவது ‘ஏ.ஐ., ரீசெட்’ என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக பணியாளர்களின் உழைப்பை அடிப்படையாக கொண்டிருந்த இத்துறை, தற்போது விளைவுகள் மற்றும் ஏ.ஐ.,யை நோக்கி நகர்கிறது  ஏ.ஐ.,யால் ஏற்படும் உற்பத்தித்திறனால், பாரம்பரிய உழைப்பு சார்ந்த சேவைகளில் ஆண்டுக்கு 2–3% வரை விலை சரிவு ஏற்படும் என நிறுவனங்கள் கணிக்கின்றன. ஐ.டி., நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு குறைந்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்  நிறுவனங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை செயல்படுத்தும்போது, வாடிக்கையாளர் உற்பத்தித்திறன் அதிகரிப்பதை இன்போசிஸ் கண்டறிந்துள்ளது  ஏ.ஐ., உட்கட்டமைப்பு மீதான முதலீடுகள் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளதால், இனிவரும் காலங்களில் முதலீடுகள் ‘ஏ.ஐ., பயன்பாட்டு தளத்திற்கு’ மாற உள்ளன. அப்போதுதான் ஐ.டி., நிறுவனங் களுக்கான அடுத்தகட்ட வளர்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலம்  வளர்ச்சி வாய்ப்பு: ‘டி.சி.எஸ்., ஹெ.ச்.சி.எல்., டெக்’ நிறுவனங்களை விட, விருப்ப செலவின பணிகளை அதிகம் நம்பியுள்ள இன்போசிஸுக்கு, சேவை துறைக்கு ஏ.ஐ., முதலீடுகள் திரும்பும்போது கூடுதல் பலன் கிடைக்கும்  குறைந்த மதிப்பு: 12 மாத வருவாயில் 15 மடங்கு என்ற மதிப்பில் வர்த்தகமாகும் இப்பங்கு, சக நிறுவனங்கள் மற்றும் தன் பழைய சராசரியை விட குறைவான விலையில் உள்ளது  மறுமதிப்பீடு: இந்திய மற்றும் உலகளாவிய போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இப்பங்கின் மதிப்பு கவர்ச்சிகரமாக உள்ளதால் எதிர்காலத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட வாய்ப்புள்ளது  புதிய தலைமை: 2028ம் நிதியாண்டில் பொறுப்பேற்கும் புதிய சி.இ.ஓ., அஷிஸ் குமாரின் திட்டங்களை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஜூலை – செப்., செயல்பாடு வருவாய் 1.20%  (காலாண்டுக்கு காலாண்டு) 1.50%  (ஆண்டுக்கு ஆண்டு) மந்தநிலை உற்பத்தி மற்றும் சில்லரை வர்த்தக துறைகளில் நிலவிய நெருக்கடியால் வருவாய் வளர்ச்சிக்கு பாதிப்பு ஒப்பந்தங்கள் புதிய ஒப்பந்தங்களின் மதிப்பு: 28%  ஒட்டுமொத்த ஒப்பந்த மதிப்பு: 39% 

200+

பார்ச்சூன்500நிறுவன வாடிக்கையாளர்கள்ரூ.1.78 லட்சம் கோடிவருவாய்3.29 லட்சம்+பணியாளர்கள் ஏ.ஐ.,க்கு முன்னுரிமை அளிக்கும் சேவைகள் மற்றும் தளங்களின் தொகுப்பாக ‘இன்போசிஸ் டோபாஸ்’ கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது விபரம் (ரூ.கோடி) : 2022–23 : 2023–24 : 2024–25 : 2025–26 வருவாய் : 1,46,767 : 1,53,670 : 1,62,990 : 1,78,650 நிகர லாபம் : 24,108 : 26,248 : 26,750 : 29,474 எப்.சி.எப்., : 19,888 : 23,009 : 33,457 : 31,259 லாப வரம்பு (%) : 16 : 17 : 16 : 16 ஆர்.ஓ.இ., (%) : 32 : 32 : 29 : 32 பி/இ (மடங்கு) : 24.52 : 23.66 : 24.37 : 17.2 டிவிடெண்டு யீல்டு (%) : 2 : 3 : 3 : 4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை