வீட்டு சோலார் பேனலுக்கு காப்பீடு
மின்சார கட்டணத்தை குறைக்க, வீடுகளின் மேற்கூரையில் ‘சோலார் பேனல்’கள் பொருத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இயற்கை பேரிடர்கள் மற்றும் தீவிபத்து போன்ற எதிர்பாராத காரணங்களால் சோலார் பேனல்கள் மற்றும் இன்வெர்ட்டர்களுக்கு சேதம் ஏற்பட்டால், அது வீட்டு உரிமையாளர்களுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்தும். இதற்காக பிரத்யேகமான காப்பீடுகள் சந்தைக்கு புது வரவாக வந்திருக்கின்றன. கவனிக்க வேண்டியவை
1. பேனல்கள் மட்டுமின்றி இன்வெர்ட்டர், பேட்டரி மற்றும் கட்டுமான செலவுகளையும் சேர்த்து, முழு அமைப்பையும் மீண்டும் புதிதாக அமைப்பதற்கான மதிப்பிற்கு காப்பீடு எடுக்க வேண்டும் 2. இயந்திர அல்லது மின்சார கோளாறுகள் மற்றும் வழக்கமான தேய்மானத்திற்கு இழப்பீடு கிடைக்குமா என்பதை பாலிசி விதிமுறைகளில் தெளிவாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும் 3. இழப்பீடு கோருவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன, கழிவு தொகை (இழப்பில் நாமே ஏற்க வேண்டிய குறைந்தபட்ச தொகை) எவ்வளவு என்பதை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் 4. ஒவ்வொரு பகுதியின் வானிலை அபாயத்திற்கு ஏற்ப பிரீமியம் மாறுபடும் என்பதால், வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் கட்டணங்கள் மற்றும் சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து தேர்ந்தெடுப்பது சிறந்தது. காப்பீட்டுப் பிரீமியம் (மாதிரி கட்டண விவரம்) காப்பீட்டு தொகை | ஆண்டு பிரீமியம் (ஜி.எஸ்.டி.,உட்பட)ரூ.2 லட்சம் | ரூ.1,030ரூ.3லட்சம் | ரூ.1,546ரூ.5 லட்சம் | ரூ.2,576 சோலார் அமைப்பின் மொத்த மதிப்பு மற்றும் அது அமைந்துள்ள பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண்ணை பொறுத்து பிரீமியம் மாறுபடும் எதற்கெல்லாம் கவரேஜ் சோலார் பேனல்கள் இன்வெர்ட்டர்கள் பேட்டரிகள் பேனல்களை தாங்கி பிடிக்கும் கட்டமைப்புகள் மேற்கூரையில் அமைப்பை பொருத்த செய்யப்பட்ட சிவில் கட்டுமான பணிகள் எந்தெந்த ஆபத்துகளுக்கு தீ விபத்து | மின்னல்புயல் | சூறாவளி | திருட்டு வெளிப்புற பொருட்கள் மோதுவதால் ஏற்படும் சேதங்கள் யாரெல்லாம் எடுக்கலாம் கடலோர பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் வசிப்பவர்கள் அரசு மானியத்துடன் சோலார் அமைத்தவர்கள் புயல், சூறாவளி அபாயம் உள்ள இடங்களில் வசிப்பவர்கள் எங்கு பெறலாம்? நேஷனல் இன்ஷூரன்ஸ் பாலிசி பஜார்