உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சென்செக்ஸ் குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன்

 சென்செக்ஸ் குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன்

சென்செக்ஸ் குறியீட்டில் டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெகிக்கிள்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'இன்டர்குளோப் ஏவியேஷன்' சேர்க்கப்பட விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 22ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வர உள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டில் 30 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த குறியீடு ஆண்டுக்கு இரு முறை, அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாற்றியமைக்கப்படும். கடந்த சில ஆண்டுகளை கணக்கில்கொண்டால், சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெறும் விமானத்துறையைச் சேர்ந்த முதல் நிறுவனம் இன்டர்குளோப் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி