உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு ரூ.80 லட்சம் கோடியாக உயர்வு

 மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு ரூ.80 லட்சம் கோடியாக உயர்வு

மி யூச்சுவல் பண்டுகள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த அக்டோபர் மாதம் வரை 79.87 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை அளவை எட்டியிருப்பது, மியூச்சுவல் பண்டுகள் சங்கமான 'ஆம்பி'யின் தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.63 சதவீத வளர்ச்சியாகும். பங்குகளில் செய்த முதலீடுகளில் கிடைத்த லாபம் மற்றும் முதலீடுகள் அதிகரித்திருப்பது ஆகியவை இதற்கு காரணம் என, துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, 'பேசிவ்' மற்றும் 'பிளெக்ஸி- கேப்' பண்டுகளில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆம்பி கூறியுள்ளது. செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், பேஸிவ் பண்டுகள் சொத்து மதிப்பு 12.99 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 13.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி