கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்த தரவுகளை, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான ஆம்பி வெளியிட்டுள்ளது. இதில், முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதியதை அடுத்து, தங்க இ.டி.எப்.,களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தை விட 74 சதவீதம் அளவுக்கு இப்பிரிவில் முதலீடு அதிகரித்துள்ளது. இதே போல், பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் லார்ஜ்-கேப் பண்டுகளிலும் முதலீடு உயர்ந்துள்ளது. எஸ்.ஐ.பி., பங்களிப்பு எஸ்.ஐ.பி., பங்களிப்பு 28,265 கோடி ரூபாயாக இருந்தது. இது ஜூலையில் சற்று அதிகமாக 28,464 கோடி ரூபாயாக இருந்தது. எஸ்.ஐ.பி., கணக்குகளின் எண்ணிக்கை 8.99 கோடி
டெப்ட் பண்டுகள் ஆகஸ்ட் மாதத்தில் கடன் பண்டுகளிலிருந்து 7,980 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. ஜூலையில் 1.06 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வரப்பெற்றுள்ளது லிக்விட் பண்டுகளிலிருந்து ஆகஸ்டில் 13,350 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. புதிய பண்டு வெளியீடுகள் ஆகஸ்ட் மாதத்தில் 23 புதிய பண்டு வெளியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 2,859 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. முந்தைய ஜூலை மாதத்தில் 10 புதிய வெளியீடுகளால் 8,997 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது.