உள்ளூர் செய்திகள்

ஐ.பி.ஓ.,

பைன் லேப்ஸ்

நி திதொழில்நுட்ப நிறுவனமான 'பைன் லேப்ஸ்' புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 2,080 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., நவ., 7ம் தேதி துவங்கி, நவ.11ல் நிறைவடைகிறது. ஐ.பி.ஓ., வாயிலாக கிடைக்கும் நிதியை, சர்வதேச அளவில் உள்ள துணை நிறுவனங்களில் முதலீடு, கிளவுட் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் கடனை திருப்பி செலுத்துதல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும் என இந்நிறுவனம் கூறியுள்ளது.

ஷேடோபாக்ஸ்

லா ஜிஸ்டிக்ஸ் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான 'ஷேடோபாக்ஸ் டெக்னாலஜிஸ்' நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிடுவது குறித்த, புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. புதிய பங்கு வெளியீடு வாயிலாக, இந்நிறுவனம் 2,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், புதிய பங்குகளை வெளியிடுவதன் வாயிலாக 1,000 கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும், ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்ய உள்ளார்கள் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. திரட்டப்படும் நிதியை கொண்டு நெட்வொர்க் கட்டமைப்பை மேம்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி