உள்ளூர் செய்திகள்

 ஐ.பி.ஓ.,

பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும் 'ஓயோ'

'ஓயோ' நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'பிரிசம்', 6,650 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது. இதற்காக, கடந்த 2025 டிசம்பரில் ரகசிய வரைவு அறிக்கையை செபியிடம் தாக்கல் செய்திருந்தது. இந்த ஐ.பி.ஓ., வெளியீட்டின் வாயிலாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 76,000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த கட்டமாக, பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக மேம்படுத்தப்பட்ட வரைவு அறிக்கையை வரும் ஜூலை தொடக்கத்தில் தாக்கல் செய்ய பிரிசம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சி.எம்.ஆர்., கிரீன் டெக்' பங்கு வாங்க முதல் நாளில் 2.46 மடங்கு விண்ணப்பம்

'சி.எம்.ஆர்., கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவன ஐ.பி.ஓ., முதல் நாள் வர்த்தக முடிவில் ஒட்டுமொத்தமாக 2.46 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விட, நிறுவனமில்லா முதலீட்டாளர்கள் 5.67 மடங்கும், சில்லறை முதலீட்டாளர்கள் 2.45 மடங்கும் விண்ணப்பித்துள்ளனர். தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு மட்டும் 0.03 மடங்கு குறைவாக இருந்தது. முழுதும் 'ஓ.எப்.எஸ்.,' முறையில் வந்துள்ள இந்த ஐ.பி.ஓ., வாயிலாக 630.88 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒரு பங்கின் விலை 182 முதல் 192 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ., வரும் ஜூன் 5ம் தேதி வரை முதலீட்டாளர்களுக்குத் திறந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை