உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐ.பி.ஓ., அலசல் பிசிக்ஸ்வாலா

ஐ.பி.ஓ., அலசல் பிசிக்ஸ்வாலா

ஆலக் பாண்டே என்பவரால் ஐ.ஐ.டி-.,ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகளுக்கான பவுதீக (Physics) பயிற்சிக்காக 2016-ம் ஆண்டில் யு டியூப் சேனலாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ஒரு கல்வி தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்தது.நொய்டாவில்தலைமையகத்தை கொண்டு செயல்படும் பிசிக்ஸ்வாலா நிறுவனம், இன்றுபல்வேறுபோட்டித்தேர்வுகள், உயர்கல்வி, திறன் மேம்படுத்துதல் மற்றும் வீட்டிலிருந்தேகற்றுக்கொண்டு வேலைதேடிக்கொள்ளும் அளவிலான திறன் மேம்படுத்துதல்வகுப்புகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

சிறப்பம்சங்கள்

* கல்வி தொழில் நுட்பத்துறையில் பெற்றுள்ள வலுவான பிராண்டு அங்கீகாரம். * சிக்கனமான கட்டணத்தில் தரமானபயிற்சிகளை வழங்குவது. இணைய வழி, நேரடி மற்றும் இரண்டும் கலந்த என பல வகைகளிலும் பயிற்சியளித்துவருமானம் ஈட்டுவது. * இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் கல்வித்தர இடைவெளியை பூர்த்தி செய்வது.* பல்வேறு விதமான போட்டித்தேர்வுகள் மற்றும் வகுப்பு நிலைகளுக்கான பன்முக பயிற்சிகளை வழங்கி இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான வருமானம் கொண்ட நிறுவனமாக திகழ்வது. * தொடர்ச்சியாக புதுமைகளை அறிமுகப்படுத்துதல் - நவீன வகை கற்பிக்கும் திட்டங்கள் மற்றும் 24x7 சந்தேகம் தீர்த்தல்.

ரிஸ்க்குகள்

* தொடர்ந்து நஷ்டமடைந்து வருவது. நஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தாலும்கூட இன்னமும் லாபம் பார்க்கவில்லை. * பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தும் வகையிலான அரசு சட்டங்களை கடைப்பிடித்தல்/ நடைமுறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளுதல். * அறிவுசார் சொத்துக்களான பயிற்சிக்கான புத்தகங்கள் வேறு நபர்களால் படைப்புத் திருட்டுக்கு ஆளாகுதல் அல்லது வேறு நபர்கள் இவற்றிற்கான உரிமையை கோருதல். * போட்டி, தொழில்நுட்ப மாறுதல், தொழிநுட்ப சிக்கல்கள் போன்றவற்றால் செலவினங்கள் அதிகரித்தல் / வருமானம் குறைதல். * திறமையான ஆசிரியர்கள் முக்கியம் என்பதால் அவர்கள் பணியில் இருந்து விலகினால் கற்பிக்கப்படும் தரம் பாதிக்கப்படுதல். * பெரும்பாலும் நிறுவனரின் தனிப்பட்ட பிராண்ட் இமேஜை நம்பி இருக்கும் வர்த்தகம் மற்றும் மார்க்கெட்டிங்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ