ஐ.பி.ஓ., :ட்ரூ ஆல்ட் பயோ எனர்ஜி
ட்ரூ ஆல்ட் பயோ எனர்ஜி
எ த்தனால் தயாரிப்பாளரான 'ட்ரூ ஆல்ட் பயோ எனர்ஜி' 839 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், முதலீட்டாளர் வசம் உள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 89.28 கோடி ரூபாயும்; புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 750 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 472 - 496 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. வரும் செப்., 25 முதல் 29 வரை புதிய பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். அட்லாண்டா எலக்ட்ரிகல்ஸ் கு ஜராத்தைச் சேர்ந்த 'டிரான்ஸ்பார்மர்' தயாரிப்பு நிறுவனமான 'அட்லாண்டா எலக்ட்ரிகல்ஸ்' 700 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, நேற்று புதிய பங்கு வெளியீடுக்கு வந்தது. பங்கு ஒன்றின் விலை 718 -- 754 ரூபாயாக நிர்ணயித்திருந்த நிலையில், ஐ.பி.ஓ., வந்த முதல் நாளிலேயே 75 சதவீத பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக சில்லரை முதலீட்டாளர் பிரிவில் 69%, நிறுவனம் அல்லாத முதலீட்டாளர் பிரிவில் 60% அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பங்குகள் கேட்டு விண்ணப்பிக்க அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. செப்., 29ல், பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.