உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மருத்துவ காப்பீடு செட்டில்மென்ட் குறைகளை கண்காணித்து நடவடிக்கை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., உறுதி

மருத்துவ காப்பீடு செட்டில்மென்ட் குறைகளை கண்காணித்து நடவடிக்கை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., உறுதி

ம ருத்துவ காப்பீடு கிளெய்ம் செட்டில்மென்ட் நடைமுறையில் உள்ள குறைபாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அஜய் சேத் தெரிவித்து உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: கிளெய்ம்கள் செட்டில்மென்ட் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேநேரம், வழங்கப்படும் கிளெய்ம் தொகை மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, காப்பீடு நிறுவனங்கள் செட்டில்மென்ட் செய்வதில் நியாயமாகவும், விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இதை கடைப்பிடிக்காதபட்சத்தில் துறையின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து விடும். நம் நாட்டில் காப்பீடு பாலிசி வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மக்கள்தொகைக்கேற்ற அளவை எட்டாமல், காப்பீடு செய்வது தொடர்ந்து குறைவாகவே உள்ளது. எனவே, கிராமப்புறங்கள், முறைசாரா பணியாளர்கள் மற்றும் பெண்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  கடந்த 2024 - 25ல் பிரீமியம் வசூல் 11.93 லட்சம் கோடி ரூபாய்  பிரீமியம் வசூலில், ஆயுள் காப்பீடு 8.86 லட்சம் கோடி ரூபாய்  காப்பீடு கிளெய்ம்கள் செட்டில்மென்ட் 8.36 லட்சம் கோடி ரூபாய்  மருத்துவ காப்பீடு செட்டில்மென்ட் 94,247 கோடி ரூபாய்  செட்டில் ஆன பொது, மருத்துவ காப்பீடு கிளெய்ம் எண்ணிக்கை 3.26 கோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை