உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  காளையின் காலை இடறிய ஐ.டி., துறை பங்குகள்

 காளையின் காலை இடறிய ஐ.டி., துறை பங்குகள்

ஐ .டி., துறை பங்குகள் நேற்று கடுமையான விற்பனை அழுத்தத்திற்கு உள்ளானதை அடுத்து, பங்கு சந்தைகள் சரிவை கண்டன. குறிப்பாக, நிப்டி ஐ.டி., குறியீடு, ஒரே நாளில் நான்கு சதவீதம் சரிவை சந்தித்தது. குறிப்பாக, 'ஹெச்.சி.எல்.,டெக்' நிறுவன பங்குகள் 10 சதவீதத்துக்கும் மேல் சரிந்ததை தொடர்ந்து, 'டெக் மஹிந்தரா, கோபோர்ஜ்' உள்ளிட்ட நிறுவனங்களும் வீழ்ச்சியை சந்தித்தன. இருப்பினும், முதலீட்டாளர்களின் பார்வை இன்று வெளியாக உள்ள இன்போசிஸ் நிறுவன காலாண்டு முடிவுகள் பக்கம் திரும்பியுள்ளது.

தரகு நிறுவனங்களின் கணிப்பு ஜே .எம்., பைனான்சியல்: வருவாய் மற்றும் லாப வரம்பு எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என்பதால், ஹெச்.சி.எல்.டெக்., நிறுவன பங்கு ஒன்றின் விலையை, 1,350 ரூபாயாக குறைத்து உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ்: ஐ.டி., துறையில் நிலவும் பொருளாதார சவால்கள் மற்றும் ஏ.ஐ.,யால் ஏற்படக்கூடிய வணிக பாதிப்பு அபாயம் இன்னும் நீடிப்பதாக எச்சரிக்கை.

வீழ்ச்சிக்கு காரணங்கள்

1 ஹெச்.சி.எல்.,டெக்., தனது வருவாய் வளர்ச்சியை, வெறும் 1- 4 சதவீதம் என்ற அளவில் மட்டுமே கணித்துள்ளது. இதனால், ஐ.டி., துறையின் எதிர்கால வளர்ச்சி குறித்த அச்சம் 2 அமெரிக்காவில் டெலிகாம், உற்பத்தி துறை நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப திட்டங்களுக்கு செலவுகளை அதிகளவு குறைத்துள்ளது 3 ஏ.ஐ.,யின் அசுர வளர்ச்சியால் ஐ.டி., சேவைகளின் விலை குறைந்து, வருவாயில் 3 - 5 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படலாம் என்ற கணிப்பு 4 உலகளாவிய பொருளாதார சூழலால், நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட தயக்கம் காட்டுவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி