ஜப்பான் நிக்கி 44,000 புள்ளிகளை கடந்தது
ஜப்பானின் 'நிக்கி 225' குறியீடு அதன் வரலாற்றில் முதன்முறையாக, நேற்றைய வர்த்தக நேரத்துக்கு இடையே, 44,000 புள்ளிகளை கடந்தது. அதிகபட்சமாக 44,185.73 புள்ளிகளை எட்டியது.எனினும், முதலீட்டாளர்கள் லாபம் ஈட்ட எண்ணியதால் வர்த்தக நேர இறுதியில் 43,500 புள்ளிகளுக்கு குறைவாக முடிவடைந்தது. ஜப்பான பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமரின் தலைமையில் அரசின் செலவினம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், பங்குச் சந்தைஏற்றம் கண்டது. மேலும் ஜப்பான் கார்கள் மீதான இறக்குமதி வரியை வரும் 16ம் தேதியிலிருந்து 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்ததும், முதலீட்டாளர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது.