உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வாகனங்களுக்கு காப்பீடு எடுப்பதில் டிசம்பர் 15 முதல் புதிய நடைமுறை

வாகனங்களுக்கு காப்பீடு எடுப்பதில் டிசம்பர் 15 முதல் புதிய நடைமுறை

தனியார் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டில், நான்கு அடுக்கு பாதுகாப்பு முறையை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை டிசம்பர் 15 முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான பாதுகாப்புகளை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம். இதற்கு முன், ஒன்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்புகளை ஒரே தொகுப்பாக பெற வேண்டிய நிலை இருந்தது. ஒவ்வொரு பாதுகாப்புக்கும் செலுத்த வேண்டிய பிரீமியத்தை காப்பீட்டு நிறுவனங்கள் தனித்தனியாக குறிப்பிட வேண்டும். இதன் வாயிலாக, வாகன காப்பீட்டின் ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு கட்டணம் செலுத்துகிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள முடியும். பாலிசி விதிமுறைகள் மற்றும் விளக்கங்களை அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஒரே மாதிரியான வாசகங்களில் வழங்க வேண்டும்.

4 வகை பாதுகாப்புகள்

பிரிவு | பாதுகாப்பு | நிலை1 | மூன்றாம் நபர் பொறுப்பு காப்பீடு | கட்டாயம்2 காரில் பயணிப்போர், பைக்கில் பின்னால் அமர்பவர்கள் மற்றும் காப்பீடு செய்தவரின் ஊழியர்களுக்கான சட்டப்பூர்வ பொறுப்பு காப்பீடு விருப்பம்3 | வாகன உரிமையாளருக்கான தனிநபர் விபத்து காப்பீடு | கட்டாயம்பயணிப்போர், பின்னால் அமர்பவர்கள், உரிமையாளர் அல்லாத பிற ஓட்டுநர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீடு விருப்பம்4 | சொந்த வாகனத்துக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்புக்கான காப்பீடு | விருப்பம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை