உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / நிப்டி 26,150 என்ற இலக்கை எட்டக்கூடும்

நிப்டி 26,150 என்ற இலக்கை எட்டக்கூடும்

நிப்டிஆரம்பம் முதல் இறுதிவரை ஏற்றத்திலேயே இருந்த நிப்டி, நாளின் இறுதியில் 103 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், அனைத்துமே ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் செலக்ட்' குறியீடு அதிகபட்சமாக 0.95 சதவிகித ஏற்றத்துடனும் குறைந்தபட்சமாக நிப்டி 0.40 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் அனைத்தும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.09% ஏற்றத்துடனும்; 'நிப்டி பார்மா' குறியீடு குறைந்தபட்சமாக 0.01% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,252 பங்குகளில் 1,650 ஏற்றத்துடனும், 1,520 இறக்கத்துடனும், 82 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.ஒரு சில டெக்னிக்கல் இண்டிகேட்டர்கள் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக இருக்கின்ற போதிலும், இன்னும் கொஞ்ச துாரம் மேலே செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது கொஞ்சம் தெளிவாகத் தெரிகிறது. செய்திகள் சாதகமாக இல்லாவிட்டால் மட்டுமே இது நடக்க வாய்ப்பில்லை. 25,975 என்ற லெவலுக்கு கீழே போகாமல் இருந்தால் 26,150-ம் சாத்தியமே.நிப்டி பேங்க்நிப்டியை போலவே, ஆரம்பம் முதலே ஏற்றம் கண்ட நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 445 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. காளைகளின் பலம் சற்று தணிவதால், ஏற்றம் என்பது, ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகே வந்துவிட்டது என்பதற்கான சூழல் தெரிகிறது.58,850-க்கும் மேலே வால்யூமுடன் நடந்துகொண்டிருந்தால், கன்சாலிடேஷன் ஓரிரு நாட்கள் நடக்கக்கூடும். செய்திகள் பாசிட்டிவாக இருந்தால், காளை மீண்டும் பலம்பெற்று 59,250 வரை பயணிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ